ஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும்

imageblog4

ஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும்

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர்தேவோ மஹேஸ்வரஹ

குருசாஷாத் பரம்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா :||

குருவே பிரம்மா குருவே விஷ்ணு குருவே மகேஸ்வரன் உண்மையில் மேலான பரப்ரஹ்மம் தான் உண்மையான மெய்குரு அவர் நம்முடனே நம் உடம்பிலேயே  இருக்கிறார். அந்த பரம்பொருளான பொருள் நம்முள் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்து அறியும் கலைதான் வாசியோகம்.குரு என்பதற்கு இருளை நீக்கி அறிவை அறிவிப்பவர் என ஒரு பொருள் உண்டு.அத்தகைய குரு நம்முள்லேயே  அனைத்தையும் அறிவிக்கும், காணும் பொருளாக இருக்கிறார் அது எது என்று சிந்தித்து உணருங்கள்.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது தானமும் தவமும் தான் செய்தலரிது –அய்வையர்

இப்படிப்பட்ட அரிதான மனிடப்பிறவிலே தானமும் தவமும் செய்யும் ஜங்கமராக பிறத்தல் அரிதுனும் அரிது. சித்தர்களுக்கு தீட்டுஇல்லை அவர்களுக்கு தோஷம் இல்லை அவர்கள் உயிர் நீங்கப்பெற்றால் எரிக்கக்கூடாது உடலை சமாதி நிலையில்தான் வைக்கப்படவேண்டும்.திதி மற்றும் தர்ப்பணம் செய்தல் தேவை இல்லை.இதே விதிகள்தான் ஜங்கமருக்கும்.இதிலிருந்தே ஜங்கமர் சித்தர்கள் வழி வந்தவர்கள் சித்தர்களாக வாழ்ந்தவர்கள் என அறியலாம்.

ஏங்குமே யிச்சீவன் நோயுமில்லை இயல்பாக இதறிந்தோர் சாகமாட்டார்

சாங்கலம்தான் தோற்றும் மரணமாகார் உயரறிவர்.

சரீரந்தோற்றும் போங்காலம் வந்தாக்கால் முன்னேகண்டு புலனிருக்குமிடங் கண்டு ஒடுங்கிக்கொள்வர்

ஆங்காலம்மறிந்தவர்கள் அடங்கிநிற்பர் அதுவறிந்து கண்டோர்கள் சுடார்கள்பாரே  –   ஸ்ரீ காக புஜண்டர்

நமது ஜங்கமர்கள் பலர் யோகிகளாக வாழ்ந்து உள்ளனர்.

பைரவ சித்தர் என்று அறியப்பட்ட மகான்

பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் 1876 ஆம் வருடம் மே மாதம் 9 ஆம் தேதி கந்தசாமி –அர்த்தநாரி தம்பதியின் மகனாக கோவை மாவட்டம் மஞ்ஜம் பாளையம் கிராமத்தில் அவதரித்தார்.தாய்மொழி தெலுங்கு கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே செள்ளக்குருக்கி கிராமத்தில் மகான் ஸ்ரீ எரிதாதா சுவாமிகளிடம் சரணடைந்தார்,இவர் ரசவாதம் அறிந்தவர் ,நவகண்டயோகம் அறிந்தவர்.

  1. (ஞான சித்தர்கள் ஆழ்ந்த தியான நிலையில் கை ,கால்,தலை போன்ற உடல் உறுப்புகள் 9 பாகங்களாக தனித்தனியே பிரிந்து காணப்படும் இதை நவகண்டயோகம் என்பர் )

சிறு கல்லை கையில் எடுத்து மூடி தங்கமாகவும்,நவரத்தினமகாவும் மாற்றிகாட்டிஉள்ளார்.ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் காணப்பட்டுஉள்ளார்.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் கீழராஜகோபுரம் சிற்பகலைநயம் மிக்க ஸ்ரீ நடராஜர் சந்நிதி ,பெங்களுரு நசரத்பேட்டை சிவாலயம் ,தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்னை கிண்டி முனீஸ்வரன் கோவில் இங்கெல்லாம் சுவாமிகளால் திருப்பணி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு அணைத்து இடங்களிலும்

சுவாமிகளின் திருஉருவச்சிலைகள் உள்ளன.சேலம் அருகே பாகல்பட்டியில் வாழ்ந்த பெரியவர்   தவத்திரு ஸ்ரீ கோபால்ஸ்வமிகள் இவர் தண்ணீரின்  மீது வாழை இலை பரப்பி அதன்மீது அமர்ந்து தவம் செய்வார். தனக்கு தானே சமாதி கட்டி அதில் அமர்ந்திருந்தவர்..குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையில் அருணாச்சல அய்யர் என்பார் தான் உயிர் துறக்கும் நேரத்தை முன்கூட்டியே சொல்லி தனக்கு தானே சமாதி கட்டி வைத்து அவர் குறிப்பிட்ட நேரத்திலே உயிர் துறந்தார். இன்னும் பலர் உள்ளனர் விபரம் அறிந்தோர் தெரிவிக்கவும்.

யான்  பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்

ஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்ற தலைப்படும் தானே – திருமூலர்

அப்படி நம் உடலில் வானகிய மறைவான பொருளாக ஊண் பற்றி நிற்கும் உணர்வினால் மட்டும் உணரக்கூடியதாக உச்சரிக்க முடியாத ஊமை எழுத்து என்பது எது ஒரேழுத்து மந்திரம் எது என்பதைஅறிந்து யோகம் செய்யும் வித்தையே வாசியோகம் இதனையே ஜங்கமர்களாகிய நாம் நித்திய சிவபூஜையாக நம் உடலிலேயே மெய்ப்பொருளாம் இறைவனை கண்டு ஆராதித்து வந்தவர்கள்.

எட்டு இரண்டு என்றால் என்ன ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் உட்பொருள் என்ன பஞ்சாட்சர. மந்திரமான நமசிவய என்பதன் உட்பொருள் என்ன இந்த மந்திரங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற வாசியோக ரகசியங்களை அறிந்து இறைவனுடன் நெருக்கமாக இருந்து உலகோர்க்கு எல்லாம் குரு வாக வாழ்ந்தவர்கள்.சான்றாக கும்பகோணம் வீரசைவ பெரியமடத்து மடதிபதிகளுக்கும்,ஸ்ரீ நிடுமாமிடி பீடாதிபதிகளுக்கும் தனி பல்லக்கு,யானை ,குதிரை, கொடி,பரிவாரங்களை வைத்துக்கொள்ளும் உரிமையும் அந்தஸ்த்தையும் நிவந்தங்களையும் சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர்.

  • இன்றும் கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் தந்தத்தினால் செய்யப்பட்டு சோழ மன்னர்களால் வழங்கப்பட்ட  பல்லக்கு உள்ளது .

அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் காணலாம்.அண்டமும் ,பிண்டமும் மற்ற அனைத்தும் ,ஆகாயம் ,வாயு,அக்னி,நீர்,மற்றும் மண் என்ற பஞ்சபூதங்களின் கூட்டு  கலவையினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.மானுட உடலில் பஞ்ச பூதங்களும் அவற்றை இயக்கும் ஆதாரங்களும் எவை அவற்றை எப்படி இயக்குவது என்ற வாசியோக ரகசியத்தை அறிந்து உயர் நிலையில் வாழ்ந்தவர்கள் ஜங்கமர்.

அ + உ + இம் = ஓம் அகாரம் என்பது எட்டாகிய  உடல் உகாரம் என்பது இரண்டாகிய உயிர் மகாரம் என்பது மனமாகிய மாயை உடல் உயிர் உள்ளம் மூன்றும் சேர்ந்தே ஒங்காரம் ஆனது.

ந என்பது மண் பூதத்தை குறிக்கும் சுவாதிஸ்டான சக்கரம்

Yyம என்பது நீர் பூதத்தை குறிக்கும் மணிபூரக சக்கரம்

சி என்பது அக்னி யை குறிக்கும் அனாகத சக்கரம்

வ என்பது வாயுவை குறிக்கும் விசுக்தி சக்கரம்

ய என்பது ஆகாயத்தை குறிக்கும் ஆக்நா சக்கரம்

ஓம் என்று மூலாதார சக்கரத்தை சுருக்கி நமசிவய என்று ஆக்நா சக்கரம் வரை வாசியை உயர்த்தி சஹஸ்ரஹார சக்கரத்தில் சுழன்று மெய்பொருளில் வாசியை இணைக்கும் யோகக்கலை அறிந்தவர்கள்.ஒரேழுத்து பேசாமந்திரமாம் .ஒளிப்புள்ளி அதனை உணர்ந்து அறிந்து தவம் செய்யும் ஆற்றல் வல்லவர்கள் ஜங்கமர்கள். gf

இதனையே சிவவாக்கியர் இன்

இத்தகைய உயர் யோக சாதனையை நாள்தோறும் அங்கத்தில் லிங்கம் அணிந்து செய்துவந்தவர்கள் .அதனால்  சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பு பெற்று அரசர்களாலும் மதிக்கப் பெற்று பல மேலான நிர்வாக பணிகளை செய்து வந்தனர்.ஆனால்காலத்தின் கோலம் நம் குலப்பெருமை மறந்து ஜங்கமர் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட்டு வாழ்வது சரியா? சேலத்தில் ஜாஸ்வா சங்கம் அமைக்க முற்பட்டபோது நான் ஜங்கமர் என்று சொல்வதே இல்லை இப்போது சங்கம் அமைத்து வெளிப்படையாக தெரியப்டுத்துகிறீர்களே என்று கேட்டவர் பலரும் இன்று சங்கஅமைப்புகளில் பெரும்ஈடுபாட்டுடன் இருப்பதை கண்டு மகிழ்கிறேன்.

முதலில் நாம் நம் குலப்பெருமை மற்றும் வரலாறு  என்ன என தெரிந்து கொள்ள வேண்டும்.முன் காலங்களில் கோவில்கள் ஆன்மிக தலங்களாக மட்டும் இல்லாமல் சமுதாய கூடங்களாக ,சேமிப்பு கிடங்குகளாக ,மருத்துவ சாலைகளாக ,கலை அரங்குகளாக

  • பொக்கிஷ சாலை களாக விளங்கின பூஜைக்கு தேவையான பூ அலங்காரம் ,பொக்கிஷ நிர்வாகம் ,தானிய கிடங்கு நிர்வாகம் ,மருத்துவசாலை நிர்வாகம் என பல்வேறு கோவில் சமுதாயம் சார்ந்த துறைகளை நிர்வகித்து வந்தவர்கள் ஜங்கமர்கள்.அதன் அடிப்படையிலே இன்று பல்வேறு பிரிவு களாக வாழ்கின்றனர் அனைவரும் ஜங்கமர்களே

குரு லிங்க ஜங்கம என்பது தனித்துவம் வாய்ந்த பொருள் கொண்டது .வைதீக அகராதி ஜங்கம என்பவர் சிவயோகி எனஉம்  தன்னுள் சிவனை ஆவிர்ப்பவர் தானே சிவசொருபமானவர் என்றும் மக்கள் நலனுக்காக ஊர் ஊராக சென்று சிவ பக்தி மார்க்கத்தில் மக்களை வழி நடத்தி செல்பவர் என்று குறிப்பிடுகிறது.

இதனையே திருமூலர்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிட தீவினை மாளும்

சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்

சிவ சிவ என்ன சிவகதி தானே

என்ற பாடல் மூலம் குறிப்பிடுகிறார்.

வீரசைவ ஜங்கமர் கொள்கைகள் :

1.குருவுருவே தியானிக்கப்படும் பொருள்

2.குரு பாத பூஜையே சிவபூஜை .

3.குரு வாக்கியமே அரும் பெரும் மந்திரம்

4.குருவருளே முக்தியாம்

5.குருவே தாயும் ,தந்தையும் ,கடவுளுமாம்

6.குருவுருவே குருலிங்க சங்கமங்களாம்

இவைகளே முக்கிய கொள்கைகளாக உபதேசிக்கப்படும் .

4.  குருவே சிவமெனக் கூறினன் நந்தி

குருவே சிவமென்பது  குறித் தோரார்

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்

குருவே யுரையுணர் வற்றதோர் கோவே ‘

-திருமந்திரம்

வீரசைவ ஜங்கமர்கள் குருவினாலே லிங்கதாரணம் செய்விக்கப்பட்டு ,நாள்தோறும் அங்கலிங்க

பூஜை செய்ய வேண்டும்.

இலிங்கம தாவ தியாரும் அறியார்

இலிங்கம தாவதெண்டிசை  எல்லாம்

இலிங்கம தாவதென்னென் கலையும்

இலிங்கம தாக எடுத்ததுஉலகே’

‘-திருமந்திரம்

இத்தகைய பெருமை பெற்ற நாம் பொருள் தேடுவது மட்டும் அல்லாமல் நமக்குள்ளே இருக்கும் மெய்ப்பொருளையும் தேடி பேறு பெற வேண்டும் .அதற்கு அணு தினமும் லிங்க பூஜை மற்றும் குரு பூஜை செய்து காமம்  குரோதம்  லோபம்   கோபம்  மதம் மாச்சரியம் இடம்பம் அகங்காரம் ஆகியன  விடுத்து நம் குல மரபுகளை கடைபிடித்து   நாட்டுக்கும் வீட்டுக்கும் நமது குலத்திற்கும் நல்ல குடி மக்களாக வாழ்வோம் உயர்வோம்

admin

Author Since:  October 29, 2020

1 Comment

Leave a Reply