நமது சமுதாய மறுமலர்ச்சி

WhatsApp Image 2021-01-08 at 2.33.18 PM(1)

நமது சமுதாயமே மாற்றத்திற்கு தயராகுவோம்.

நம்முடைய சமுதாய வரலாற்றிலேயே முதன் முறையாக சமுதாய முன்னேற்றதிற்கான
உண்மையான புதிய வரலாறு படைத்திட உருவாக்கப்பட்டது நம்முடைய VBN என்கின்ற
வீரசைவ சமுதாய வணிக குழு.

முதன் முதலில் இந்த குழுவின் தொடக்க கூட்டம் தமிழ்நாடு கொங்கு மண்டலம் கோவை
மாநகரில் சரவணம்பட்டியில் அமைந்துள்ள குரு அமுதாஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
தொடங்கம் முதலே பல்வேறு இடையூறுகளையும் இன்னல்களையும் சந்தித்து இன்று ஆலமரமாக
நம்முடைய சமுதாய மக்கள் மனதில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறது என்றால் மிகையாகது.

VBN குழு நிர்வாகத்தின் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு கூட்டத்திற்கும் உறுதுணையாக இருந்த
நல்ல உள்ளங்களுக்கு இந்த கட்டுரையின் வாயிலாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாரமல் சமுதாய முன்னேற்றதிற்கு உறுதுணையாக
இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த குழுவில் கடைசிவரை பயணிக்க முடியும் என்பதையும்
கண்கூடாக காண முடிகிறது.

நம்முடைய VBN குழு இதுவரை வெற்றிகரமான 17லு கூட்டம் கோவை, திருப்பூர், சேலம் மற்றும்
பல சிறப்பான காணொலி காட்சி கூட்டங்களை வெற்றிகரமான முறையில் நடத்தி நம்முடைய
சமுதாயத்திற்குள் சுமார் 75 லட்சங்களுக்கு மேல் வியாபார பரிவர்த்தனைகள் நடத்திட வழிவகை
செய்தி சமுதாயத்திற்குள் ஒரு புதிய உற்சாகத்தையும் மற்றும் நம்பிக்கையும் கொடுத்துள்ளோம்.

விரைவில் 2021 வருட இறுதிக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில
தொழில் முனைவோரை ஒருங்கிணைத்திட அனைத்து தென்னிந்திய மாவட்டங்களில் தம்முடைய
VBN குழு கூட்டம் நடத்தி திட்டமிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக வருகின்ற 27.12.20 ஆம்
தேதி கேரளா பாலக்காடு மாவட்டம், 31.01.21 தேதி ஆந்திரா திருப்பதி மற்றும் 28.02.21 தேதி
கர்நாடகா பெங்களூரு மாவட்டத்தில் கூட்டம் நடத்திட VBN நிர்வாகிகள் மூலம்
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் நம்முடைய VBN குழுவின் கூட்டம்
நடத்திட களப்பணி நடைபெற்று வருகிறது.

வருகின்ற 2025 ஆம் வருடத்திற்குள் உலக முழுவதும் உள்ள நமது நமது உறவுகளை
ஒன்றினைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தருணத்தில் சில வேதனையான வினோதமான இன்னல்களும் இடையூறுகளும் நம்முடைய
VBN குழுவிற்கு ஏற்பட்டு வருகிறது. அத்துனையும் தவுடு பொடியாக்கும் வண்ணம் புதிய
வழிகாட்டுதல் குழு ஏற்படுத்தப்பட்டு அவர்களுடன் திரு. K.R. வெங்கடேஸ்வரன், திரு.குமாரசாமி,
திரு. NICE மனோகரன், DR. திரு அசோக், Dr.திரு.செந்தில்குமார், திரு.ராமராஜ் மற்றும்
திரு.ஜெயன் போன்றோர் இணைந்து மேலும் வலுசேர்த்து வருகிறார்கள்.

மேலும் VBN குழுவிற்கு 10ற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் நியமிக்கபட்டுள்ளார்கள். மேலும்
சட்டதுறை வல்லுநர் குழு, உறுப்பினர்கள் குழு, IT Wing குழு, பயிற்சி& மேம்பாட்டு குழு போன்ற
ஆக்கபூர்வமான குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்வடிவம் பெற்று வருகிறது.

இது போன்ற ஒரு வரலாற்று எழுச்சியின் பொழுது நம் சமுதாய அனைத்து உறவுகளும் சற்று
சிந்திக்க வேண்டுகிறோம்.

நான் வீரசைவன்
நான் ஜங்கம்
நான் பண்டாரம்
நான் யோகி
நான் யோகீஸ்வரன்
ஜங்கம் என்றால் தெலுங்கு மட்டும் தான் தமிழ் கிடையாது
வீரசைவத்தின் அனைத்து உட்பிரவு என்று கிடையாது
வீரசைவம் ஒரு மதம் சாதி கிடையாது
ஜங்கம் என்பது பண்டாரம் கிடையாது
ஆண்டி பண்டாரத்திற்கும் ஜங்கமரும் வேறு வேறு….

இது போன்று பல்வேறு விதமான உரையாடல்கள் கருத்து வேறு பாடுகள் இன்றும் நமது
சமுதாயத்தை சார்ந்த பல்வேறு சமூக வலைதளம் மூலமாக பகிரப்பட்டு வருகிறது.

இத்தகைய கருத்துகள் பலரால் பரிமாற பட்டு வருகிறது. இதற்கு ஒரு சில உறவுகளும்
சங்கங்களும் தூபம் போட்டு வருகிறார்கள்.

இது போன்ற வெற்று பேச்சுகளால் நம் சமுதாயம் தேய்பிறையாக தேய்ந்து கொண்டே போய்
கொண்டிருக்கிறது.

இது போன்ற பிரிவினை கருத்துகளை பேசுவோர் நம் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு
முயல்கிறார்களா என்றால் கேள்வி குறியே மிஞ்சுகிறது.

ஒரு சிலர் எடுக்கும் சில முயற்சிகளையும் முட்டு கட்டை போட்டு நகைகின்றனர். இதுபோன்ற
செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக சற்றே விலகி நம்முடைய முன்னோர்கள் 100 வருடங்களுக்கு
முன்பு பிரிவினை பாரமல் வாழ்ந்து வந்தார்களோ அதே போன்று சாதி சான்றிதல் மூலம் மற்றும்
சாதி சங்கள் மூலம் பிரிந்து கிடக்கும் நம்முடைய அனைத்து உறவுகளும் ஒரே வட்டத்தில் ஒரே
குடையில் கீழ் வலுபெற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது VBN என்கின்ற
வீரசைவ சமுதாய வணிக குழு.

VBN குழுவின் சார்ப்பாக உலகமெங்குமுள்ள நம்முடைய உட்பிரிவுகளை ஒருங்கினைக்கும்
முயற்ச்சியின் முதல் படியாக முற்றிலும் வித்தியாசமான நம்முடைய சமுதாய வரலாற்றில் முதன்
முறையாக மிக சிறப்பான முறையில் ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம்
நம் இன வளர்ச்சிக்கு மிக முக்கியமான பாலமாக எதிர்கால காலத்தில் திகழும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறவுகளும் மிக எளிமையான முறையில் தங்களை பற்றிய தகவல்களை நம் இனத்தை
சார்ந்த இந்த உலக முழுவதும் உள்ள நம்முடைய உறவுகள் தெரிந்து கொள்கின்ற வகையில்
தொழில் முனைவோர், தனிநபர், சிறந்த வல்லுனர்கள் என்கின்ற வகையில் தங்களை பதிவு
செய்து நம்முடைய சமுதாயத்தின் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்பான வலைதளத்தை வருகின்ற சனவரி மாதம் 16 ஆம் தேதி 2021 அன்று
நம்முடைய இன மடமான பழம் பெருமை வாய்ந்த வாரணாசி ஜங்கம் வாடி மடத்தில் தவத்திரு.ஸ்ரீ
ஜகத்குரு சந்திரசேகர் சிவச்சார்ய மகாசுவாமிகள் வெளியிடுவுள்ளார் என்கின்ற மகிழ்ச்சியான
செய்தியை இந்த பத்திரிக்கை மூலமாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைக்கிறோம்.

நம் சமுதாயத்தை பற்றிய பலவிதமான நகைச்சுவை, கேலி சொற்கள் போன்ற பல நிகழ்ச்சிகள்
நடைபெறுகிறது. இதற்காக பல தரப்பட்ட வார்த்தை போர்கள் வலைதளம் அலைதளம்
போன்றவற்றில் நம்மை நாமே பெறுமையாக பேசி வீரவசனத்துடன் பல்வேறு வகையான
பதிவுகளை பகிர்கின்றோம். ஆனால் நமது உறவுகளுக்குள் மொழி, உட்பிரிவு, சங்கங்களுக்கு
அப்பாற்ப்பட்டு ஒற்றுமையை ஏற்ப்படுத்த அனைவரும் தவறிவிட்டனர்.

நிதர்சனமான உண்மை என்னவென்றால் நம் இண மக்கள் இன்றும் பல்வேறு பகுதிகளில்
எந்தவொரு ஆதரவுமின்றி அடிப்படை வசதிகளின்றி வாழ்வதற்கே கஷ்பட்டு வருகிறார்கள்.
தாங்கள் சார்ந்த பகுதிகளில் அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இந்த குழுவின் மூலம் உட்பிரிவு பேதமின்றி மொழி பேதமின்றி சாதி தலைவர்கள் என்கின்ற
பேதமின்றி சாதி சங்கள் என்கின்ற பேதமின்றி நாம் அனைவரும் ஒரே இரத்த உறவுகள் என்கின்ற
உயர்ந்த நோக்கில் நமக்கு நாமே என்கின்ற சமுதாய மாற்றத்திற்கு அனைத்து உறவுகளும்
ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

நாம் அனைத்து உறவுகளும் ஒரே வட்டத்தில் ஒன்று கூடி நாம் உயர்வதற்கு பாடுபட்டோம்
என்றால் நம்முடைய ஒற்றுமை வருகின்ற காலத்தில் பல அரசியல் தலைவர்களை நம்
சமுதாயத்தின் வளர்ச்சியின் மீதான கவனத்தை ஈர்க்க முடியும்.

மீண்டும் ஒரு முறை சிந்திக்க வேண்டுகிறோம், நம்முடைய பாட்டனார், முப்பாட்டனார் முழு
பெயரையும் தெரிந்து கொள்வோம். நம்முடைய முன்னோர்கள் வாங்கிய சொத்து பத்திரத்தில்
உள்ள பெயர்களை படித்து தெரிந்துகொள்வோம் நாம் எவ்வாறு சிதரிகொண்டிருக்கிறோம்
என்பதை தெளிவாக புரிந்து கொள்வோம்.

தனிமனித வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி. மீண்டும் மீண்டும் சங்க நியாங்களை பேசி நம்முடைய
வளர்ச்சியை நாம் தொலைத்து கொண்டிருக்கிறோம். ஒரே ஊரில் ஒரே தெருவில் இருந்தும் மொழி
பிரிவினை பேசி சாதி சான்றிதழ்கள் மூலம் நம்மை நாமே விலகி இந்த உலகில் நாம் என்ன
சாதித்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தியுங்கள்.

நம்மை விட குறைந்த எண்ணிக்கையுள்ள சமுதாயத்தினரின் இன்றைய வளர்ச்சியை கண்டாவது
நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்.

உட்பிரிவு பெயரை சொல்லி பிரித்தாலும் தலைவர்களை சற்றே ஒதுக்கி வருகின்ற காலகட்டத்தில்
நம்முடைய அடுத்த தலைமுறைகாக நாம் அனைவரும் ஒரே குடும்ப உறவாக மாற வேண்டிய
மாற்றத்திற்கு கைகொடுப்போம்.

இது மாற்றத்திற்கான நேரம்.

இப்போ இல்லையென்றால் எப்போவும் கிடையாது.

நமக்கு நாமே
மாற்றத்தால் முன்னேறுவோம்

நம்முடைய புதிய தலைமுறைக்காக இந்த மாற்றம் அவசியமான ஒன்று.
நமது சமுதாயமே மாற்றத்திற்கு தயராகுவோம்.

admin

Author Since:  October 29, 2020

Leave a Reply